Thursday, September 16, 2010

கவிதைகள்!

அன்னை!

உருவற்று கிடந்த எனக்கு
உடல் கொடுத்தவள்,
உணவற்று தவித்த எனக்கு
தன் உதிரத்தையே பாலாக்கியவள்,
கல்வியறிவற்று திரிந்த எனக்கு
பள்ளியனுப்பி பாடம் புகட்டியவள்,
என் வளமான வாழ்வுக்கு
அடித்தளம் அமைத்தவள்
இன்று அவள்மட்டும்
தனிமரமாய்
எங்கள் சொந்த கிராமத்தில்,
நானோ நாகரிகம்
தந்த சுகவாழ்வுடன்
அயல்நாட்டில்!!!!

மனம்!

மனித மனம்
ஒரு
குரங்காம்,
யார் கூறியது?
இதோ
என் மனம்
வேறு யாரிடமும்
தாவாமல்
அவளை மட்டுமே
வட்டமிடுகிறதே!

சிறைப்பறவை!

சுதந்திர வானில்
சுற்றிதிரியும்போது
என்றேனும் ஒரு நாள்
வேடனிடம்
அடிபட்டு இறப்பதைவிட
என் ஆயுட்காலம் முழுவதும்
உன் நெஞ்சக்கூட்டில்
சிறைப்பறவையாய்
வாழ்வதே மேல் அல்லவா???!!!

கவிஞன்!

அவன்
ஒரு
சிறந்த கவிஞனாம்
நான் அதை ஏற்கமாட்டேன்
அவன் இதுவரை
உன் விழிகளை
வர்ணித்ததே இல்லையே???!!!

4 comments:

Post a Comment

Related Posts with Thumbnails