Wednesday, September 22, 2010

இயற்கையை ரசிக்க கத்துகிட்டேன்....வாழ்வையும் சேர்த்து!


அப்போ நான் 10 ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.எங்களுக்கு பிரின்சிபால் அப்போல்லாம் இங்கிலீஷ் பாடம் சொல்லிகொடுக்க வாரம் ஒரு வகுப்பிற்கு(period) வருவார்கள்.இங்கிலிஷ்க்கு எங்களுக்கு வேற ஒரு ஆசிரியை இருந்தாங்க.இருந்தாலும் எங்க ப்ரின்சிபாலோட தனிப்பட்ட ஆர்வத்துல அவங்களே சில சமயம் பாடம் எடுப்பாங்க.பிரின்சிபால்ன்னு எந்த ஒரு கெடுபிடியோ,ஆர்ப்பாட்டமோ,ஆதிக்கமோ இல்லாத அற்புதமான மனுஷி.அவங்க கிளாஸ்க்கு வர்ற அந்த வகுப்புக்காவே காத்துகிட்டு இருப்போம். ஏன்னா பாடத்த பாடமா சொல்லாம கதை மாதிரி ரசிக்கும்படியா சொல்வாங்க.

அப்படி ஒரு நாள் அவங்க பாடம் நடத்தும்போது விடிகாலையைப்பத்தி பேச்சு வந்தது.அவங்க சொன்னாங்க (இங்கிலிஷ்லத்தான்) "நானும் பல வருஷமா விடியற்காலையிலே வானத்தை பாத்துகிட்டே இருக்கேன்.அது இருள்சூழ்ந்து இருக்கும்....ஆனா கண்ணிமைக்கிற நேரத்துல வெளுத்துபோயிடுது.அது எப்படின்னு யோசிப்பேன்.இன்னிக்குவரைக்கும் பதில் கிடைக்கல. இயற்கையோட அழகே அழகுதான்.இத இதுவரைக்கும் யாராவது கவனிச்சதுண்டா? "னு.அப்போதான் யோசிச்சேன்
பொழுது விடியர்துன்றது தினமும் நடக்குற ஒரு நிகழ்வு.ஆனா அதையும் ரசிச்சு கலைகண்ணோட பாக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அதுக்கப்புறம் ஒரு நாள் நிஜமாவே ஒரு காலை பொழுதில் உட்கார்ந்து பார்த்தேன்.ஆம் எல்லாமே ஒரு நொடியில் மாறுது.இருள் சூழ்ந்து இருக்கும் வானம் ஒளி படர்ந்து காட்சி கொடுக்குது.இதே போலத்தான் நம்ம வாழ்க்கைல வர்ற கஷ்டங்களும் அந்த இருளைப்போல இருந்த தடம் தெரியாம மறைஞ்சுடும்னு நம்ப ஆரம்பிச்சேன்.

இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்கனு தெரியாது.ஆனா எனக்கு வாழ்க்கைய ரசிக்க கத்துகொடுத்தவங்கள்ள அவங்களும் முக்கியமான ஒருத்தர்.

3 comments:

அருண் பிரசாத் said...

:)

இயற்கை என்றுமே அழகுதான்

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையோட அழகே அழகுதான்.

Thenral said...

Nanri!

Post a Comment

Related Posts with Thumbnails