Wednesday, February 17, 2010

இன்பம் நம் மனதில்


நம் அனைவருக்கும் வாழ்வில் துன்பம் வருவது இயற்கை.சிலர் தமக்கு நேரும் துன்பம் போல் உலகில் வேறு எவருக்கும் வருவதில்லை என புலம்புவதை நாம் கேள்விபட்டிருபோம். உண்மையாகவே சிலருக்கு அடுக்கடுக்கான பிரச்சினைகள் வருவதுண்டு.இதை நாம் நம் மனதை பக்குவபடுத்தும் நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.துன்பம் இல்லை என்றால் இன்பத்தின் அருமையை நாம் எவ்வாறு அறியமுடியும்?கடவுள் நமக்கு துன்பங்கள் கொடுக்கிறார் என்றால் அவர் நமக்கு உதவி செய்ய தயாராக உள்ளார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்மால் மட்டுமே இத்தகைய துன்பங்களை எதிர் கொள்ள முடியுமென்று நம்புகிறார்.வாழ்க்கை நாம் நினைப்பது போல் போட்டி அல்ல வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும்; வாழ்க்கை ஒரு வரம் நாம் வாழ்ந்து பார்க்க,இயற்கையை ரசிக்க,வியக்க,....இன்பம் வரும்போது சந்தோஷமாக ஏற்றுகொள்ளும் நாம் துன்பத்தில் மட்டும் புலம்புவது எந்த விதத்திலும் சரி ஆகாது.இரண்டையுமே சமமாக பார்க்க பழகி கொள்ள வேண்டும்.இன்பமோ துன்பமோ இரண்டுமே நம் மனதில் மட்டுமே இருக்கிறது.சுற்றுசூழல் இன்பமாக இருந்தாலும் நம் மனதில் நிம்மதி இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்க இயலாது.நம்
மனதை பூவனம்போல் வைத்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதற்கான சில வழிமுறைகளை என் அடுத்த வலைப்பூவில் சொல்கிறேன்.

அதுவரை உங்கள் வாழ்வில் குளிர் தென்றல் வீசட்டும்...


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails