Tuesday, August 31, 2010

ஏனடி??!!!

என் வானமென்று நினைத்தேன் உன்னை
வானவில்லாய் மறைந்தாய்,
என் மழைமேகமென நினைத்தேன் உன்னை
வெறும் கானல் நீராய் கரைந்தாய்,
என் உயிரே நீதான் என நினைத்தேன்
என் வாழ்வையே வெறுமையாக்கி சென்றாய்;

Monday, August 30, 2010

நறுக்குன்னு ஒரு கேள்வி?!!!

அவள்:அந்த ஆள...என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்?பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா?அவன்தான் டைவார்ஸ் கொடுப்பானா?நானும் கையெழுத்து போடுறேன்.
அவள் அம்மா:எத செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்மா.
அவள்:ஏம்மா! அவனுக்கு அவ்ளோ கொழுப்பு இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்?
நானும் மாசம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறேன்மா.நான் ஏன் அடங்கிபோகணும்?எனக்கென்ன தலை எழுத்தா?என்ன வேலைக்காரிமாதிரி நடத்துனா...அதன் கோச்சுகிட்டு வந்துட்டேன்.இப்போ வக்கீல் நோடீஸ் அனுப்பிசிருக்கான்.
அவள் அம்மா:இல்லம்மா இதெல்லாம் பேச நல்ல இருக்கும்.வாழ்க்கைக்கு ஒத்துவருமா?
அவள்:நீ சும்மா இரும்மா எனக்கு தெரியும்.நான் பாத்துகறேன் அந்தாள கோர்ட்ல..அவன்
:டேய், அவளுக்கு திமிர பாத்தியாடா?எல்லாம் சம்பாதிக்குற திமிரு.நாந்தான் கோவத்துல டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிச்சுட்டேன்.அவளாவது மன்னிச்சுடுங்க நாம சேர்ந்து வாழலாம்னு சொல்றாளா பாரு!
அவன் friend:நீதான் விட்டுகொடுத்துபோயேன்.
அவன்:விட்ரா.நிலைமை தலைக்கு மேல போய்டுச்சு.இனிமே கோர்ட்தான் பதில் சொல்லணும்.கோர்ட்ல அவங்களுக்கு அன்னிக்கு trial.
பலவிதமான வாதங்கள்.ரெண்டு பெரும் சளைக்காம ஒருத்தரபத்தி ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
இவங்கள செர்த்துவைக்கவே முடியாதுன்னு முடிவு பண்ண ஜட்ஜ் இவங்க ரெண்டுபேரையும் பார்த்து கேட்டார்.
"உங்களுக்குள் மனவேற்றுமை அதிகமா இருக்கு.நாங்க என்ன சொன்னாலும் கேட்குற நிலமையில நீங்க இல்ல.உங்களுக்கு இந்த கோர்ட் விவாகத்தில் இருந்து விடுதலை கொடுத்திரும் ஆனா எந்த கோர்ட்ல போய் உங்க 5 வயசு குழந்தைக்கு எந்த கோர்டுக்கு போய் விடுதலை வாங்கி கொடுப்பீங்க?????"
ரெண்டு பெரும் ஒருத்தருக்கொருத்தர் சலனமே இல்லாமல் பாத்துகிட்டாங்க!!

இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது.கமல் படத்துல சொல்வாரு.
"husband அண்ட் wife பிரியலாம் ஆனா அம்மா அப்பா பிரியக்கூடாது!!"யோசிங்க மக்களே!!!
டிஸ்கி:இது 100% புனைவு (கற்பனைங்க) அதனாலே இப்படி எல்லாம் மரியாதை இல்லாம husbandஅ பேசுவாங்களான்னு கேட்டு தயவு செஞ்சு பின்னூட்டம் வேண்டாம்.கருத்த மட்டும் எடுத்துகோங்க ple.....ase.

நாம் இழந்துகொண்டிருக்கும் இன்பங்கள்!

இன்றைய சூழலில் நாம் வசதியாக,பகட்டாக வாழலாம்.சந்தோஷமாக,நிம்மதியாக வாழ்கிறோமா?மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளித்தால் இல்லை எனலாம்.
நாம் அன்று விளையாடிய விளையாட்டுக்கள் இன்று எத்தனை குழந்தைகளிடம் பரிச்சயமாயிருக்கும்?பல்லாங்குழி,நொண்டி(அல்லது பாண்டி),கல்லா மண்ணா, இன்னும் பல.

T.v., வீடியோ கேம்ஸ்-ல் ஆர்வம் காட்டும் குழந்தைகள் இன்று ஓடி விளையாடுவதில்லை.விளையாடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.அக்கம் பக்கத்தில் பேசுவதே கிடையாது.(காரணம்:நேரம் இல்லை).வீட்டிலும் தனிமை(பெற்றோரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்,தாத்தா பாட்டியும் வீட்டில் கிடையாது).Battery உபயோகித்து விளையாடும் விளையாட்டு சாமான்கள் ஜாஸ்தியாகிவிட்டன.அதற்க்கும் அடிக்கடி Battery மாற்றவேண்டும்,அடிக்கடி விளையாடாதே என்று திட்டு வேறு.Battery பொம்மைகள் அல்லாது குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் மலையேறிவிட்டன.இப்படியே போனால் நம் குழந்தைகளுக்கு மற்ற வகுப்புகளை போல பிறரோடு எப்படி பேசவேண்டுமென்றும்,பழகவேண்டுமென்றும் வகுப்பெடுக்க நேரிடும்.அதற்கு முன்னரே விழித்துகொள்வோம்.குழந்தைகளுக்கு பல ஆற்றல்கள் வரவைப்பதில் தவறில்லை ஆனால் அவை அவர்களின் உலகத்தையே திருடி அவர்களை அவர்களாக இல்லாமல் செய்வதை தடுக்க வேண்டும்.குழந்தைகள் தெய்வங்களின் மறு உருவம்.ஆகவே அவர்களின் குழந்தைபருவம் இனிதாய் அமைய ஓடி ஆடி விளையாட ஆயத்தபடுத்துவோம்!

Thursday, August 26, 2010

புண் பட்ட நெஞ்சம்!

இது நான் 7th std படிச்சுகிட்டு இருந்தப்போ நடந்தது.எனக்கு எங்க schoola ரொம்ப பிடிக்கும்.(யாருக்குதான் பிடிக்காது?னு நீங்க கேட்குறது புரியுது).எனக்கு moral values பத்தி சொல்லிகொடுத்தது எங்க ஸ்கூல்தான். நான் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்(நம்புங்கப்பா) கிட்டத்தட்ட ஒரு 3 ரேங்க்குள்ளே வந்துருவேன்.எனக்கு சுமாரா படிக்கிற ஒரு friend இருந்தா.அன்னிக்கு progress ரிப்போர்ட் கொடுத்துகிட்டு இருந்தாங்க.அந்த பொண்ணு நாலு subjectல அவுட்(அதான் fail).

நான் செகண்ட் ரேங்க் எடுத்திருந்தேன்.என் பக்கத்துல உட்கார்ந்திருந்தா அந்த பொண்ணு.மிஸ் அவல எழுப்பி "இவ உன் பிரெண்டா?"(என்ன காமிச்சு)னு கேட்டாங்க.அவளும் சாதாரணமா "ஆமா"னு சொன்னா.உடனே மிஸ் அவகிட்டே "வெளிய எங்கேயும் இப்படி சொல்லிடாதே அவளுக்குத்தான் அவமானம்"னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டாங்க.எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.பின்ன என்னங்க moral valuesக்காக நான் பார்த்து பார்த்து வியந்த பள்ளியில் இப்படியொரு சம்பவம்.படிக்கலைன்றது ஒரு கொலை குத்தம் இல்லையே?அவங்கவங்களுக்கு என்ன திறமை இருக்கோ அதை போற்றலைன்னாலும் அவங்க இயலாமையை கிண்டல் பண்ண கூடாதுங்கறது என் எண்ணம்.அவங்க அவளை தனியா அழைச்சுட்டுபோய் சொல்லி புரியவச்சிருக்கலாம்.இப்படி எல்லோர் முன்னிலையிலும் அப்படியொரு வார்த்தை அவளை எவ்ளோ காயப்படுதியிருக்கும்னு நினைச்சாலே இப்போவும் கஷ்டமா இருக்கு.

அதனாலே பிள்ளைகளை கண்டிப்பதிலும் ஒரு பாசத்தோட ஒரு அணுகுமுறையை கடைபிடிக்கலாமே!நிச்சயம் அவங்க எதிர்காலம் வளமையானதா இருக்கும்!

Related Posts with Thumbnails