Friday, July 30, 2010

அங்காடி தெரு-என் பார்வையில்!


அங்காடி தெரு...
வலையுலகமே கொண்டாடின படம்.நான் எப்போவோ பாத்துட்டேன்.ஆனா இவ்ளோ நல்ல படத்துக்கு detailஆ பதிவு போடணும்னு நினைச்சேன்.அதான் late. எனக்கு ரொம்ப பிடிச்சது.மகேஷ்-அஞ்சலி பொருத்தமான தேர்வு.மற்ற கதாபாத்திரங்களும் நடிக்கல வாழ்ந்திருக்காங்க.படம் ஆரம்பிக்கும்போதே 'கதைகளை பேசும்...' பாட்டு நம்மள படத்தோட ஒன்றவச்சுருக்கு.அவங்களோட அந்த வறுமையிலும் அவங்களோட விளையாட்டுக்கள்,வெங்கடேஷ அவங்க கலைக்கிற பாங்கு எல்லாமே சூப்பர்.வாழ்க்கை வாழ்வதற்கே!ஆனா அந்த accidentக்கு அப்புறம் அவங்களோட வாழ்க்கைமுறை எல்லாரோட பரிதாபத்தையும் அள்ளிட்டுபோய்டும்.வருமையினாலே ஒரு மனுஷன் என்னா பாடு படறான்னு தெளிவா காமிச்சுருக்கார் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள்.black பாண்டி as usual காமெடியில பின்றாரு.தமிழுக்கு ஒரு நல்ல காமெடியன் ரெடி.அவர் தமிழ் தாய் வாழ்த்த காதல் கவிதையா எழுதிகொடுக்கும்போது நம்மால சிரிப்பா நிச்சயம் அடக்கமுடியாது.congrats paandi!அந்த கண்ணு தெரியாத பெரியவர்,குள்ளமா இருக்கறவரு,அவர் மனைவியா வர்றவங்க,கனியோட ப்ரெண்டா வந்து செத்துபோற அந்த பொண்ணு,உழைச்சுதான் சாப்பிடுவேன் பிச்சை எடுக்கமாட்டேன்னு வைராக்யமா பப்ளிக் toiletஅ clean பண்ணி பிழைப்பு நடத்துபவர்னு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்காரு மனுஷன்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாட்டு ஒண்ணொண்ணும் ஒரு விதம்.எல்லாமே சூப்பரப்பு.'அவள் அப்படி...' lyrics பின்னிட்டீங்க பாஸ்.'எங்கே போவேனோ...' குரல்லயே காதலோட வலிய பிரம்மாதமா வெளிப்படுதியிருக்காங்க (பென்னி,பாலாஜி,ஜானகி ஐயர்).
அந்த சின்ன பொண்ணு வயசுக்கு வந்ததும் ஆச்சாரம்னு சொல்லி நாய் கட்டிபோடுற இடத்துல தூங்க வைக்கிறது கொடுமை.இன்னும் பல இடங்கள்ள நடக்குது...மனசு வேதனையா இருக்கு.அந்த கோவில்ல அவங்கள அரவணைக்கிற பண்பு மனுஷத்தன்மைன்னு ஒண்ணு இன்னும் இந்த உலகத்துல இருக்குனு காட்டுது.சிநேகா சிநேகமா வந்துட்டு போறாங்க.கிளைமாக்ஸ் first class.அஞ்சலி அவங்கள மகேஷ் விட்டுட்டுபோயடுவார்னு நினைக்குறப்போ அவர் சொல்ற வசனமும் அதுக்கு ரெண்டுபேரும் கொடுக்குற முகபாவனையும் அய்யோ! புதுமுகமான்னு கேட்க தோணுதுங்க மகேஷ பாத்து.
மொத்தத்துல ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுதுங்க.

அம்மா!!!

அம்மா...ரொம்ப அழகான வார்த்தைங்க.ஒவ்வொரு மனுஷனும் பிறந்தவுடன் சொல்ற முதல் வார்த்தை 'அம்மா'தாங்க.(என்ன நீ புதுசா சொல்ல போறன்னுதானே கேட்குறீங்க?கரெக்ட் நான் ஒன்னும் புதுசா சொல்ல போறதில்லை.)

கடவுள் பூமிக்கு வந்து ஒவ்வொருத்தரையும் பாத்துக்கமுடியாதுங்கரதால அவரோட பிரதிநிதிகளா அம்மான்ற உறவை நமக்கு கொடுத்திருக்கார்.நாத்திகவாதிகூட அம்மான்ற தெய்வத்துமேல அன்பும்,பக்தியும் கொண்டிருக்கறத நாம பாக்கலாம்.அப்படி என்ன 'அம்மா' முக்கியம்.நம்ம ஊர்ல அம்மா மேல இருக்குற ஒரு செண்டிமெண்ட் அப்பா மேல கிடையாது(அவர் எவ்ளோவோ செஞ்சாலும்).அதுக்கு காரணம் பத்து மாசம் அவங்க சுமந்து பெறுவதால் மட்டும் இல்லன்னு நான் நினைக்கிறேன்.ஒரு குழந்தை பிறந்தப்புறமும் அது நைட்ல தூங்காம அழும்போது முழிச்சிருந்து பாத்துகிட்டு
காலையிலயும் கணவனுக்கு உணவு கொடுத்து அவர ஆபீஸ் அனுப்பிவைப்பாங்க.பிள்ளைக்கு ஒத்துக்காதுன்னு அவங்களுக்கு பிடிச்ச உணவா இருந்தாலும் எடுத்துக்க மாட்டாங்க.அவங்களோட விஉப்பத்தைஎல்லாம் மறைச்சு பிள்ளைகளோட விருப்பத்தையே முன்னிருத்துவாங்க.அவங்களோட கண்டிப்புலையும் ஒரு பாசம் ஒளிஞ்சிருக்கறது நல்லா தெரியும்.இன்னும் எத்தனையோ....நான் சொல்லாம விட்டது.

நிஜம்மாவே 'அம்மா'ங்கறவங்க தெய்வம்தாங்க.இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னு நினைக்கறீங்களா?என்னோட முதல் பதிவு அம்மாவபத்தி இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.But வேற எதோ போட்டுட்டேன்.அதான் சரி இப்போ போடலாமேன்னு....

Thursday, July 29, 2010

நான் சமீபத்தில் ரசித்த திரைப்படங்கள்!

நான் ரொம்ப நாளைக்கப்புறம் படங்கள் பாத்தேன்.பாத்தா மட்டும் போடுமா?அதான் உங்களோட என் கருத்துக்கள(நல்லா கவனிங்க மக்களே என் கருத்துக்கள மட்டும்) பகிர்ந்துக்கலாம்னு வந்துட்டேன்.

1.மதராசபட்டினம்:
ags entertainment produce பண்ணி இருக்காங்க.ஆர்யா,எமி ஜாக்சன்,நாசர்,பாலா சிங்,மற்றும் பலர் நடிச்சுருக்காங்க.விஜய்(கிரீடம் புகழ்(???!!!)) டைரக்ட் பண்ணி இருக்காரு.G.V.பிரகாஷ் இசை.ஆஹா பழைய சென்னைய அழகா காமிச்சுருக்காக.எமி சூப்பரா நடிச்சுருக்காங்க.(தமிழ் heroines கவனத்திற்கு)ஆர்யா நல்லா குஸ்தி போடுறார்,ஆடி பாடுறார் ஆனா மனுஷனுக்கு feelingsஅ கண்ணுல காமிச்சு நடிக்க மாட்டேன்குறாரே!ஆர்யா படத்தோட ஒட்டாதமாதிரியே ஒரு feeling.அவங்க காதலும் அவ்ளோ ஆழமா இல்ல (or தெரியல)."ஆருயிரே" அர்த்தமுள்ள பாட்டு situation சரி இல்லைங்கே.அவங்க பிரிஞ்சதுக்குஅப்புறம் வச்சிருக்கலாம்.(ரயில்வே ஸ்டேஷன்ல பாக்குரத்துக்கு முன்னாடி வச்சிருக்கலாம்).anyway nice movie to be watched.

2.ஆனந்தபுரத்துவீடு:
நந்தா,சாயாசிங்,கிருஷ்ணா நடிச்சிருக்காங்க.நல்ல கதை.இந்த படத்த பாத்தப்புறம் அவங்கவங்க அப்பா அம்மா மேல இருக்குற பாசம் ஜாஸ்தி ஆகும்.நண்பனோட துரோகம், அத அழகா "நான் தனிய இருந்தப்போ ஒரே நண்பனா வந்தான் அவன விட்ருங்க"னு சொல்றது,மனைவியிடம் தன் கஷ்டத்தை மறைப்பதுனு direction சூப்பர்.நம்ம நாகாவாச்சே.(சின்னத்திரை மர்ம தேசம் புகழ்).ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்னு தோணுது.படம்...ஒருமுறை குடும்பத்தோடு பார்க்கலாம் .

3.இரும்புகோட்டைமுரட்டுசிங்கம்:
லாரான்ஸ்,சந்த்யா,லக்ஷ்மி ராய்,பத்மப்ரிய,மௌலி,செந்தில், மனோரமா,...இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு இந்த படத்துல.
கதைன்னு பாத்தா ஒன்னும் இல்லேங்கே.ஆனா சூப்பர் காமெடி.அதுவும் அந்த புதையல் எடுக்குற சீன்தான் படத்துக்கு highlight.ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டியும் ஒருமுறை பாக்கலாம்.

4.ரெட்டைசுழி:
பாரதிராஜா,பாலச்சந்தர் என இரு பெரும் இயக்குநர்கள நடிகர்களாக்கி இருக்காங்க.இயக்குனர்களுக்கு நடிக்க கத்துகொடுக்கணுமா?நல்லாவே செஞ்சிருக்காங்க.பல இடங்கள்ள "பசங்க" படத்த ஞாபகப்படுத்தரத தடுக்க முடியல.ஆனாலும் விறுவிறுப்பா போகுது.பாலச்சந்தர் வில்லன் நடிப்புல கச்சிதம்.பாரதிராஜா அடக்கி வாசிச்சு பெற தட்டிட்டு போய்ட்றாரு.அஞ்சலி நல்ல நடிச்சுருக்காங்க.படம் நல்லாவே இருந்துச்சு.

5.பையா:
லிங்குசாமி படம்.கார்த்தி,தமன்னா நடிச்சுருக்காங்க.கார்லயே படம் போகுது.பாட்டெல்லாம் சூப்....பர்!"என் காதல் சொல்ல" என்னா வரிகள்?அட்ரா அட்ரா....சூப்பர்ங்கோ.ஆனா கிளைமாக்ஸ்ல தமன்னாவுக்கு கார்த்தி மேல காதல் வந்தே ஆகணும்னு திணிச்சாமாதிரி இருக்கு.வேற வழியே இல்லாம கார்த்திய லவ் பண்றாமாதிரி காமிச்சது நல்லா இல்லைங்கோ!படம் ஓகே...சூப்பர்னெல்லாம் சொல்ல முடியாது.

ஏ..பாப்பா நீ கொஞ்சம் தள்ளு....

தலைப்பை பார்த்துட்டு யாரும் தப்பா நினைக்க வேணாம்.நான் 8th std படிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைபத்தி இங்கே எழுதபோறேன்.

எங்க ஸ்கூல் எங்க வீட்லருந்து ஒரு 10 நிமிஷம்தான்.அதனால நான் வீட்டுக்கு என் friendsஓடதான் daily போவேன்,வருவேன்.எங்க ஸ்கூல் இருக்கறது ஒன்னும் பெரிய ரோடெல்லாம் இல்லை.ஆனாலும் பெரிய வண்டிங்க போகும்.ஆனா இந்த பீக் ஹவர்ஸ்ல அந்த பக்கம் போறது ரொம்பவே கஷ்டம்.

நானும் என் பிரெண்ட்சும் ஒரு நாள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம்.நாங்க ஓரமாதான் நடந்து போனோம்.அப்போ எங்க பின்னாலே வந்த பைக்ல ரெண்டு வாலிபர்கள் இருந்தாங்க.அப்போதான் விஜயோட "பத்ரி" படம் ரிலீஸ் ஆகி "ஏ..பாப்பா" அப்படின்ற பாட்டு ரொம்ப famous ஆச்சு.அதுல ஒருத்தன் எங்க ஃப்ரெண்ட பாத்து "ஏ..பாப்பா நீ கொஞ்சம் தள்ளு"னு பாடினான்.அப்போ கோவம் வந்தாலும் அப்புறம் நினைச்சு பாக்கும்போது அவனோட timing sense நல்லா இருந்ததுன்னு தோணிச்சு.பிறகு அவள எங்க ரோட்ல பார்த்தாலும் இதே பாட்ட பாடி கிண்டல் பண்றதே ஒரு வேலையா வச்சிருந்தோம்....

Thursday, July 22, 2010

என்னவள்....அவளா???!!!

ஒரு நாள் காலை வேளையில் அலுவலகம் செல்ல பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.தூரத்தில் அவள் வருவது கண்டேன்.'அவளா?அவள்தான?எனக்குள் ஏகப்பட்ட சந்தேகம்.அருகில் வரட்டும் பார்க்கலாம்'.அவள்...என் மனதில் தென்றலென வந்து புயலென மாறி என் வாழ்வையே புரட்டிபோட்டவள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவளும் ஒரே கல்லூரியில்தான் பயின்றோம்.எங்களுக்குள் முதலில் மோதல் பிறகு அனைத்து தமிழ் சினிமாவிலும் வருவது போல் அப்படி ஒரு தெய்வீக(?) காதல்.அவளை நான்
என் உயிரின் வடிவமாகப்பார்த்தேன்.என் உலகம் எப்போதுமே அழகுதான்... அது இன்னும் பேரழகானது அவளால்தான் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு?

நான் இன்றே புதியதாய் பிறந்தவனை உணர்ந்தேன்...காற்றிலே சிறகுகளின்றி மிதந்தேன்.என் நாட்கள் நொடிகளென கரைந்தது.இதுவரை நான் பார்த்த பல இடங்கள் எனக்கு மெருகூட்டப்பட்ட அழகுடன் காட்ச்சியாளித்தன...என்னவளின் அருகாமையால்.என் வாழ்வின் அர்த்தமே என் கண்முன்னே அவள் உருவம் கொண்டு வருவதாய் கற்பனை செய்தேன்.

இவையெல்லாம் எங்களது கல்வியை disturb செய்ய நாங்கள் அனுமதிக்காததின் பலன் எங்கள் இறுதியாண்டு campus தேர்வில் இருவரும் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்ததில் தெரிந்தது.அதன்பிறகு வாரம் இருமுறை பீச்களிலும்,பார்க்களிலும்,சினிமா தியேட்டேர்களிலும்,இன்னபிற இடங்களிலும் தொடர்ந்தன எங்கள் காதல்.

நாட்கள் கடந்தன.எங்கள் காதலை எங்கள் வீடுகளில் சொல்லும் நேரமும் வந்தது.
நான் என் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டேன்...எனக்கு அது பெரிய வேலையாக இருக்காது என்பது முன்னமே தெரிந்த விஷயம்தான்.என் வீட்டில் சிறுவயதுமுதல் என் விருப்பத்திர்க்கே முன்னுரிமை.அவள் வீட்டில் எங்கள் ஜாதி வேற்றுமை பெரிதாய் தோன்றவே எங்கள் ஆத்மார்த்தமான காதலை நிராகரிக்க துணிந்தனர்.நாங்கள் எவ்வளவோ மன்றாடியும் நாங்கள் விரும்பிய வாழ்வமைத்துக்கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை.

நாங்களும் எங்கள் முடிவில் உறுதியாய் இருந்தோம்.அனால் விதி அவள் அன்னையின் மூலம் சதி செய்தது.அவள் அன்னையின் தற்கொலை முயற்சி அவள் உறுதியை குலைத்தது.ஆம் அவர்கள் பார்த்து முடிவு செய்திருந்த அவர்கள் ஜாதி பையனுக்கே அவளை மனம்முடித்துவிட்டார்கள்.திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு என்னிடம் அவள் வந்து 'என்னை மன்னித்துவிடு!நம் காதல் எனக்கு பெரிதுதான் ஆனால் அதைவிட என் அம்மா எனக்கு முக்கியம்.நீயும் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று கூறிவிட்டு சென்றாள்.என் நெஞ்சில் இடியை இறக்கியதுபோன்ற ஒரு உணர்வு.நீ இல்லாது ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்க இயலுமா என்னால்?உன்னை என் உயிர் என்றல்லவா கருதி இருந்தேன் இன்று என்னை மறந்து விடு என்கிறாய்.எப்படி மறப்பேன்?என் இதயம் துடிப்பதை நிறுத்தினாலும் உன்னை நினைப்பதை நிறுத்தாதே?என் வாழ்வு இனி உன்னோடு அல்ல என்பதை நீ கூறிவிட்டாய்...சரி உன் நினைவுகளோடுதான் நான் முடிவுசெய்துவிட்டேன்.

காலங்கள் உருண்டோடிவிட்டன.அதோ தூரத்தில் அவள் எதிரில் அவளேதான்.அவளை பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை.பார்த்தால் என் மனம் என்னவளை கண்டதுபோல் துள்ளிக்குதிக்கும்...வேண்டாம் நான் அவளை காணப்போவதில்லை.இன்று அவள் இன்னொருவனின் மனைவி.நான் எப்படியேனும் இந்த இடத்தைவிட்டு அகன்றாகவேண்டும்.அவள் வருவதர்க்குள்.அவள் இந்த பேருந்து நிலையத்துக்குத்தான் வருகிறாள்...அருகில் வந்துவிட்டாள்.அப்பாட!நான் போகவேண்டிய பேருந்து வந்தாயிற்று.நான் அந்த பேருந்தில் ஏறினேன்.என் மனம் மட்டும் அந்த பேருந்து நிலையத்திலேயே!!!

Monday, July 19, 2010

மதராசபட்டினம் பாடல்கள்

நான் இன்னும் மதராசபட்டினம் படம் பாக்காததால பாடல்களை மட்டும் பிரித்து மேயலாம்னு இருக்கேன்.(Mind voice-ஆமா படம் பாக்காதத எவ்ளோ அழகா சமாளிக்கிற?).

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படத்தோட எல்லா பாட்டும் பிடிச்சது இதுலதான்.("வாரணம் ஆயிரத்"துக்கு அப்புறம்).முதல்ல "மதராசபட்டினம்" டீமிற்கு வாழ்த்துக்கள்.இவ்ளோ அழகான படம் கொடுத்ததுக்கு.படம் பாக்கணும் போல ஒரு எண்ணத்தை விதைச்சதே பெரிய விஷயம்.இசைஅமைப்பாளர் g.v.பிரகாஷ்க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.பாட்டு ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல நல்லா வந்திருக்கு.

1."மேகமே":-ஆஹா!சலவை செய்யறவங்களோட வாழ்க்கைய இந்த ஒரு பாட்டுல கண்முன்னாடி நிறுத்திட்டீங்க.பாடல் வரிகளும் அருமை.அவங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு மழை ரசிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து ஆடுவதுபோல் உணர்வு வருவது அழகு...!இயற்கை அன்னை நமக்கு எவ்வளவு அழகிய பரிசளித்திருக்கிறாள்?காட்சியமைப்பும் சூப்பர்.நாசர்,பாலா சிங் இருவருக்கும் போட்டி மாதிரி காமிக்கிறது(படம் பாக்காததனால ஏன்னு தெரியல),"குண்டு போடறாங்க"னு அப்பாவிய சொல்றது,வெள்ளைக்கார டிரஸ் போட்டு ஆர்யாவிடம் அடி வாங்குபவர் என நகைச்சுவையும் கலந்து இருக்கிறது.

2."வாம்மா துரையம்மா":-ஐயோ!பழைய மெட்ராஸ்!ஏக்கமா இருக்குதுங்கோ...!
ஹனிஃபாவின் கமெண்ட்,மொழிபெயர்ப்பு எல்லாம் சூப்பர் timing காமெடி.பாட்டிலே மெட்ராஸின் பெருமைகள சொல்லியிருக்காங்க.ஆஹா இந்த பாட்டை பாக்கும்போது சென்னைய நான் அதிகமா மிஸ் பண்றேன்.

3."பூக்கள் பூக்கும்":-இந்த பாட்டு ஆரம்பத்திலே ஆர்யா கொடுக்கும் expression, ஆர்யா நீங்க கலக்கிட்டீங்க போங்க.பாடல் வரிகள்,அந்த ஹம்மிங் எல்லாமே இந்த பாட்டை ஒரு superhit பாட்டாக்கிருச்சு.எடிட்டிங் சூப்பர் இந்த பாட்டுல படகுல ஒவ்வொரு angleஆ ம்யூசிக்குக்கு ஏத்தாமாதிரி அழகா எடிட் பண்ணி இருக்காங்க.

4."ஆருயிரே":-மெலடி பாடல்...வரிகளும் பிரமாதம்.இந்த பாட்டுல வர்ற கோட்டை (செட்டான்னு தெரியல) அந்தக்கால படங்கரத எடுத்து காட்டி இருக்கு.ஆனாலும் எங்கேயோ ஒரு மூலையிலே "ஓ...பிரியா பிரியா"(இதயத்தை திருடாதே) பாடல நினைவுப்படுத்துது.எமியோட வாயசைவு சூப்பர்.தெள்ளதெளிவா இருக்கு.தமிழ் heroines கவனியுங்கோ...!

5."காற்றிலே":-இதுதான் படத்தோட முக்கிய பாடலாம்.சுதந்திரத்தையும், காதலோட வலியையும் அழகா இணைச்சிருக்காங்க.மெட்டு first கிளாஸ்.நமக்கும் ஒரு உத்வேகம் இந்த பாடலை கேட்கும்போது வருது."காரிருள் நீங்கி...."அந்த ரிபீட் ஆகுற lines முணுமுணுக்க வைக்குது.

இப்போ என்னோட வாயிலே முனுமுனுக்கும் பாடல்கள் இந்த திரைப்படபாடல்கல்தான்.

Thursday, July 15, 2010

நான் ரசித்த திரைப்படங்கள்-II

1. காக்க காக்க:
கௌதம் மேனன்-சூர்யா-ஜோதிகா-ஹாரிஸ் ஜெயராஜ்-தாமரை சூப்பர் கூட்டணி.ஒரு நல்ல போலீஸ் படம்.சூர்யா ரொம்ப மெனக்கெட்டு ஒரு போலீஸ் எப்படி உடம்பை ஃபிட்டா வைச்சுக்கணுமோ அவ்ளோ கட்டுமஸ்த்தா வச்சுருப்பார்.சூர்யா-ஜோதிகா லவ் எபிசோடு ரொம்ப ரொமாண்டிக்கா லௌவப்லா இருந்தது.'ஒரு ஊரில்' பாடல் வரிகள் நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திருக்கும்.'உயிரின் உயிரே' பாடல் நிச்சயமா நிறைய பேரோட ரிங்க்டோனா இருந்திருக்கும்.கிளைமாக்ஸ் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்.ஒரு அழகான காதல் ஜோடிய பிரிச்சுட்டாங்களேன்னு வருத்தமா இருந்துச்சு.வன்முறையையும், கேட்ட வார்த்தைகளையும் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்.ஆனால் படம் சூப்பர்.

2.அன்பே சிவம்:
கமலோட தரமான படம்.மாதவனும் இணைஞ்சிருக்கார்.இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்குற வேற்றுமையை லாவகமா நகைச்சுவையா கையாண்டிருக்காங்க.கமலோட flashback தோற்றம் அழகா இருந்திச்சு.அவரோடய make-up நல்ல இருந்தது.கமல்ஹாசனுக்கு இதெல்லாம் ஒரு மேட்டேரா?கிரணுக்கும் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.அதை ஓரளவுக்கு நல்லாவே பயன்படுத்தியிருக்காங்க.'பூ வாசம்' பாடல் அருமையான மெலடி.கிளைமாக்ஸ் மெசேஜ்தான் படத்தை தூக்கி நிறுத்துது.

3.உன்னை நினைத்து:
அழகான காதல் கதை.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.சூர்யா ஏமாறும் இடம் இப்படியெல்லாம்கூட எமாத்துராங்களான்னு நினைக்க தோணுது.ஆனா நிஜத்தில் இதைவிட மோசமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சிநேகாவின் கதாபாத்திரம் நன்று.லைலா, ஒரு சராசரி பெண்ணை பிரதிபலிக்கிறார்.சினிமா கதாநாயகியானால் காதலுக்காக தூக்கி எரியும் விதியை மீறி நடித்திருக்கிறார்.'என்னை தாலாட்டும்' பாடல் வரிகள் நன்று.இதுவும் மெசேஜ் சொல்லும் படமே!

நான் ரசித்த திரைப்படங்கள்-I

வணக்கம்!இப்போ நான் ரசிச்ச சில படங்கள பத்தி இங்கே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.நானும் சின்ன வயசுலேர்ந்து சினிமா பார்த்தே வளர்ந்ததனாலே தமிழ் சினிமா மேல ஒரு அலாதி பிரியம்.அதனாலே லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கும்.இத ஒரு தொடர் மாதிரி part part-ஆ போடலாம்னு இருக்கேன்...

1.மௌன ராகம் :
இது மணிரத்தினம் படம்ட்ரதாலையே ஒரு ஈர்ப்பு வர்றது நிஜம்.ஒரு matured லவ் ஸ்டோரி.மோகன் பல படங்கள்ல மைக் பிடிச்சு பார்த்த நமக்கு இதுல வர்ற கேரக்டர் ரொம்ப புதுசு.அழகா அடக்கி வாசிச்சிருப்பார். ரேவதி அவங்க கதாபாத்திரத்தை உணர்ந்து நல்ல நடிச்சிருப்பாங்க.கார்த்திக் சொல்லவே வேண்டாம்.இந்த படத்துக்கப்புரம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்திருக்கும்.'சந்திரமௌலி'ங்கிற பேரை கேட்டு யாராலாவது கார்த்திக்கை நினைக்காம இருக்க முடியுமா?கிளைமாக்ஸ்ம் நச்சுனு இருக்கும்.இளையராஜாவைப்பத்தி இங்கே சொல்லலேன்னா ஒரு கூட்டம் என்னை அடிக்கவே வந்துடும்.பாட்டெல்லாம் இப்போவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல போட்ருக்கார்.அப்புறம் அந்த 'சர்தார்ஜி' காமெடி(ஹிந்தி சொல்லி கொடுக்கும் சீன்) யாராவது சிரிக்காம இருந்திருப்பாங்களா?

2.மௌனம் சம்மதம்:
நல்ல கிரைம் ஸ்டோரி.மம்மூட்டி அசத்தியிருப்பார்.'கல்யாண தேனிலா' பாட்டை மறக்க முடியுமா?எல்லா கதாபாத்திரங்களும் அழகா நடிச்சுருப்பாங்க.யார் கொலையாளின்னு கடைசி வரைக்கும் இருக்கும் suspenseதான் படத்தோட சுவாரஸ்யத்துக்கு முக்கிய காரணம்.திரைக்கதை சூப்பர்.

3.குருதிப்புனல்:
கமலோட அட்டகாசமான போலீஸ் படம்.என் favorite ஹீரோ அர்ஜுன் வேற சேர்ந்து நடிச்சுருக்கார்.இதவிட வேற காரணம் வேண்டுமா எனக்கு இந்த படம் பிடிக்க.ரெண்டு பேருமே இதுல ரொம்ப handsomeஆ இருப்பாங்க.எந்த compromiseம் பண்ணாமல் பாட்டு இல்லாம படம் எடுத்த தைரியத்துக்கே பாராட்டலாம்.

4.ஆஹா:
அருமையான குடும்ப கதை.ஒரு கூட்டுக்குடும்பத்தை நம் கண்முன்னே நிறுத்திய டைரக்டருக்கு பாராட்டுக்கள்.அதையும் சீரியஸா கொடுக்காம நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கும் விதத்துக்கே இந்த பட்டியலில் சேர்க்கலாம்னு தோணிச்சு.நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ், என் கண்ணுல தண்ணியே வந்துடும்போல இருந்தது.புதுமுகங்களை வச்சு அழகா ஒரு entertaining movie கொடுத்திருக்கார் டைரக்டர்.பானுப்ரியாவப்பத்தி சொல்லியே ஆகணும்.இந்த படம் எனக்கு பிடிக்க முக்கிய காரணம் அவங்கதான்.ஆஹா அந்த அந்தாக்ஷரில 'நின்னுகோரீ' பாட்டு பாடி 'அழகிய ரகுவரனே'ன்னு சொல்லி ஒரு வெட்கப்படுவாங்களே சூப்பர்.

5.அலைபாயுதே:
என் ஆல் டைம் பேவரிட் படம்னா அது இதுதான்.again மணிரத்தினம் சார்மிங் டைரக்டர்.romancela என்னமா பின்னி எடுக்கறார் மனுஷன்.மாதவனுக்கு ஒரு நல்ல opening.எனக்கு புடிச்ச ஹீரோயின் ஷாலினி நடிச்ச படம்.இந்த படத்துல நடிச்சதுக்கப்புரம் இவங்கள தமிழ் சினிமா மிஸ் பண்ணபோகுதுன்னு பேர் வாங்கினாங்க.அவ்ளோ சூப்பரா நடிச்சாங்க.பாட்டு....நம்ம ஆஸ்கார் ஹீரோ ஏ.ர்.ரஹ்மான்.கேட்கணுமா?5 பாட்டுமே செம ஹிட்.ஆனாலும் எனக்கு புடிச்சது 'எவனோ ஒருவன்'தான்.காதலோட,பிரிவோட வலிய அழகா காமிச்சு இருப்பாங்க.
ச்வர்ணலதாவோட குரல் பெரிய பிளஸ் பாயிண்ட்.மொத்தத்துல ரொம்ப நல்லா இருந்துச்சு.நான் theatre-ல ரெண்டு வாட்டி பார்த்தேன்.

(என் ரசிப்புத்தன்மை ஜாஸ்தியா இருக்கறதுனாலே தொடரும்....)

Monday, July 12, 2010

சொர்கமே என்றாலும்...!

இன்று பலரும் தன வீட்டை விட்டு வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ சென்று வேலை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஏனெனில் இன்றைய பொருளாதார சூழல் அப்படி.விருப்பம் இல்லை எனினும் அவர்கள் அந்த சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வேறு வழியின்றி செல்பவர்களை விட்டு விடலாம்,வேண்டுமென்றே வெளிநாடு செல்ல விருப்பபட்டு போகிறவர்களுக்காக இந்த பதிவு.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் நாம் நம் வீட்டில் இருப்பதுபோல் இருக்காது.நாம் ஒரு இடத்திலும் நம் குடும்பத்தார் இன்னொரு இடத்திலும் இருப்பது பெரிய தண்டனை.இதை நாம் தெரிந்தே விரும்பி ஏற்கிறோம்.நம் பெற்றோர் நாம் வரும் அந்த ஓரிரு நாட்களை எண்ணி ஏங்கி கொண்டிருப்பார்கள்.நம் அருகாமையைவிட பெரிய பரிசு அவர்களுக்கேது?இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் உள்ளூரில் இருந்தாலே நம் குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது கொஞ்சம் கடினம்.அதிலும் வெளிநாடென்றால்...?நம் பெற்றோரை நாமே அருகில் இருந்து கவனித்து கொள்ளவில்லைஎனில் வேறு எவரால் அதை சிறப்பாக செய்ய முடியும்?

நாம் திரும்பி வரும்போது பெரும் செல்வம் நம்மிடத்தில் என்ன...ஆனால் சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்திருப்போம்.ஒரு குழந்தையின் மழலை ஒரு சில வருடங்களுக்குதான்.அதை அனுபவிக்க ஒரு தந்தை குழந்தையின் அருகாமையில் இருக்க வேண்டும்.அந்த அருமையான வருடங்களை பணம் சம்பாதிப்பதில் செலவழித்துவிட்டு பிறகு என்ன பயன்?தாய் தந்தையர் உயிரோடு இருக்கும்போது அருகில் இருந்து aபார்த்துக்கொள்ளாமல் அவர்கள் உயிர் இழந்தபிறகு அழுதாலும் புலம்பிநாலும் என்ன பயன்?சிந்திப்பார்களா...?

நமக்கு ஜுரம் வந்தால் பாட்டி கஷாயம் போட்டுகொடுக்கும் சுகம்,'உடம்பை நல்ல பாத்துக்க கூடாதா?' என்கிற தாத்தாவின் அக்கறை,தலைவலி தைலம் தேய்த்துவிடும் அம்மாவின் அரவணைப்பு,'டாக்டர்கிட்ட போலாம் வா' என்று அழைத்து செல்லும் தந்தையின் பாசம்,...இப்படி ஒருவருக்கு உடம்பு சரிஇல்லை என்றாலும் குடும்பமே உருடுனையாய் நிற்கும் அன்பு அது கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் கிட்டாத சுகம்.இதையெல்லாம் விட்டுவிட்டு
வெறும் printed papers-க்காக (அதான் பணம்) தவரவிடுகிறவர்களை என்னவென்று சொல்வது?

இங்கு உங்கள் வீட்டில் ராஜாவாக இருப்பதைவிட்டு, வெளிநாடுகளில்
அடிமையாக வாழ வேண்டுமா?சிந்தியுங்கள்....வாழ்க்கை வாழ்வதற்கே!

வசீகரா திரைப்படத்தில் விஜய் அழகாக சொல்வார்,'நான் வெளிநாடு சென்றால் கார் வாங்கி அதன் போட்டோவைத்தான் தந்தைக்கு அனுப்பி வைக்க முடியும்.ஆனால் உள்ளூரில் இருந்தால் மாட்டு வண்டியில் உடன் செல்ல முடியும்'.யோசிக்க வேண்டிய வார்த்தைகள்.

ஆகவே நண்பர்களே!இனியேனும் வெளிநாட்டு மோகத்தைவிட்டு
உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் அருகாமையை பரிசளியுங்கள்.அதை விட ஒரு பரிசு உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுக்க இயலாது!

ராவணன்-ஒரு பார்வை!

போன மாசம் 26-ஆம் aதேதி ஆல்பர்ட் theatre-ல kபார்த்தேன்.பதிவு போட late ஆயிடுச்சு.கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதனால மறுபடி சொல்லி போர் அடிக்காம எனக்கு என்ன தோணிச்சோ அதை மட்டும் சொல்ல போறேன்.(Build up ஜாஸ்தியா இருக்குல.சரி நான் matterக்கு வரேன்) ராவணன்!எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம்.அதற்கு காரணம்
நிறைய சொல்லலாம்.விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,இன்னும் முக்கியமா மணிரத்தினம்,ரொம்ப நாளைக்கப்புறம் பிரபுவும் கார்த்திக்கும் சேர்ந்து நடிச்சது,ஆஸ்கார் அவார்ட் வாங்கின இசைஅமைப்பாளர் .ர்.ரஹ்மான்,...அத எல்லாம் பூர்த்தி செஞ்சுதாணு எனக்கு இன்னும் ஒரு டவுட் இருக்கு.எனக்கு படம் பிடிச்சிருந்தது.பட் நிறைய minus இருந்தது.படத்தோட பிளஸ்:விக்ரம்,ஐஷ்,songs,கிளைமாக்ஸ் fight,bridge செட்,location,minus:romance missing,ப்ரித்விராஜ் கேரக்டர்,ஹிந்தி ஸ்டைல் (ப்ரியாமணி) marriage செட்,கார்த்திக்-ன்ற ஒரு நல்ல actor-ஐ வீணடித்திருப்பது .

ஒபெனிங்
சீன்-ஏ சூப்பர்.விக்ரம் மலையில் இருந்து குதிக்குறத பார்க்கும் போது ஒரு பரபரப்பு நம்மையும் தொத்திக்குது.ஆனால் மணிரத்தினம் படத்தில எப்போவும் இருக்கும் ஒரு ஸ்பெஷல் romance இதுல missing.சேசிங் scenes கொஞ்சம் dryயாத்தான் போவுது.விறுவிறுப்பு missing.ஆனால் இது எல்லாத்தையும் அந்த climax fight (பாலம் செட் சூப்பர்) மறக்க வச்சிடுது.
விக்ரம் மேல ஐஷ் எந்த ஒரு காதலும் காட்ரமாதிரி எனக்கு தோணல.அது ஒரு மனுஷனுக்கு நடந்த அநியாயத்துக்கு காட்ற கருணை,பரிதாபம்,அவ்வளவுதான்னு எனக்கு தோணிச்சு.விக்ரம் மேல இருக்குற குற்றம் என்னன்னு தெளிவா காமிக்கல.அத காமிச்சுருந்தா இன்னும் effect இருந்திருக்கும்னு நான் நம்பறேன்.கிளைமாக்ஸ் song நல்லா இருக்கு lyricsம் சரி,locationம் சரி மணி மணிதான்னு prove பண்ணிட்டார்.ஆனால் sir, நீங்க romantic films தமிழ் style-ல எடுத்தா உங்களுக்கு நிகர் நீங்க தான்.ஹிந்தி style-ல தமிழ் படம் கொடுக்காதீங்க sir.
ராவணன்!location,song,மணிரத்னத்துக்காக பார்க்கலாம்!

Related Posts with Thumbnails