Monday, July 12, 2010

சொர்கமே என்றாலும்...!

இன்று பலரும் தன வீட்டை விட்டு வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ சென்று வேலை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஏனெனில் இன்றைய பொருளாதார சூழல் அப்படி.விருப்பம் இல்லை எனினும் அவர்கள் அந்த சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வேறு வழியின்றி செல்பவர்களை விட்டு விடலாம்,வேண்டுமென்றே வெளிநாடு செல்ல விருப்பபட்டு போகிறவர்களுக்காக இந்த பதிவு.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் நாம் நம் வீட்டில் இருப்பதுபோல் இருக்காது.நாம் ஒரு இடத்திலும் நம் குடும்பத்தார் இன்னொரு இடத்திலும் இருப்பது பெரிய தண்டனை.இதை நாம் தெரிந்தே விரும்பி ஏற்கிறோம்.நம் பெற்றோர் நாம் வரும் அந்த ஓரிரு நாட்களை எண்ணி ஏங்கி கொண்டிருப்பார்கள்.நம் அருகாமையைவிட பெரிய பரிசு அவர்களுக்கேது?இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் உள்ளூரில் இருந்தாலே நம் குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது கொஞ்சம் கடினம்.அதிலும் வெளிநாடென்றால்...?நம் பெற்றோரை நாமே அருகில் இருந்து கவனித்து கொள்ளவில்லைஎனில் வேறு எவரால் அதை சிறப்பாக செய்ய முடியும்?

நாம் திரும்பி வரும்போது பெரும் செல்வம் நம்மிடத்தில் என்ன...ஆனால் சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்திருப்போம்.ஒரு குழந்தையின் மழலை ஒரு சில வருடங்களுக்குதான்.அதை அனுபவிக்க ஒரு தந்தை குழந்தையின் அருகாமையில் இருக்க வேண்டும்.அந்த அருமையான வருடங்களை பணம் சம்பாதிப்பதில் செலவழித்துவிட்டு பிறகு என்ன பயன்?தாய் தந்தையர் உயிரோடு இருக்கும்போது அருகில் இருந்து aபார்த்துக்கொள்ளாமல் அவர்கள் உயிர் இழந்தபிறகு அழுதாலும் புலம்பிநாலும் என்ன பயன்?சிந்திப்பார்களா...?

நமக்கு ஜுரம் வந்தால் பாட்டி கஷாயம் போட்டுகொடுக்கும் சுகம்,'உடம்பை நல்ல பாத்துக்க கூடாதா?' என்கிற தாத்தாவின் அக்கறை,தலைவலி தைலம் தேய்த்துவிடும் அம்மாவின் அரவணைப்பு,'டாக்டர்கிட்ட போலாம் வா' என்று அழைத்து செல்லும் தந்தையின் பாசம்,...இப்படி ஒருவருக்கு உடம்பு சரிஇல்லை என்றாலும் குடும்பமே உருடுனையாய் நிற்கும் அன்பு அது கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் கிட்டாத சுகம்.இதையெல்லாம் விட்டுவிட்டு
வெறும் printed papers-க்காக (அதான் பணம்) தவரவிடுகிறவர்களை என்னவென்று சொல்வது?

இங்கு உங்கள் வீட்டில் ராஜாவாக இருப்பதைவிட்டு, வெளிநாடுகளில்
அடிமையாக வாழ வேண்டுமா?சிந்தியுங்கள்....வாழ்க்கை வாழ்வதற்கே!

வசீகரா திரைப்படத்தில் விஜய் அழகாக சொல்வார்,'நான் வெளிநாடு சென்றால் கார் வாங்கி அதன் போட்டோவைத்தான் தந்தைக்கு அனுப்பி வைக்க முடியும்.ஆனால் உள்ளூரில் இருந்தால் மாட்டு வண்டியில் உடன் செல்ல முடியும்'.யோசிக்க வேண்டிய வார்த்தைகள்.

ஆகவே நண்பர்களே!இனியேனும் வெளிநாட்டு மோகத்தைவிட்டு
உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் அருகாமையை பரிசளியுங்கள்.அதை விட ஒரு பரிசு உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுக்க இயலாது!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails