Thursday, February 25, 2010

நேசிக்க துவங்குங்கள்!காதல் ஒரு அழகான வார்த்தை!காதல்னா ஒரு ஆண் ஒரு பெண் மேலையோ இல்ல ஒரு பெண் ஆண் மேலையோ காட்ற அன்பு மட்டும் இல்ல.நான் இங்கே சொல்ல போற காதலே வேற.காதல்ன்ற வார்த்தைக்கு அர்த்தமே ஆழமான விருப்பம்,அதீத அன்புதான்.பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டும் அன்பு,பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் பரிவு,அக்கறை,குடும்பதினருக்குள்ள இருக்கிற பாசம்,ஒற்றுமை,இவ்வளவு ஏன் ஒரு மனுஷன் சக மனுஷன் மேல காட்டுற மனிதாபிமானம்,நாம இயற்கையை ரசிக்கிறது எல்லாமே காதல்தான்.காதல் இல்லனா வாழ்க்கை போர் அடிச்சிடும்.நாம செய்யுற வேலையகூட காதலிச்சு செஞ்சாதான் சிறப்ப செய்ய முடியும்.

நமக்காக ஒருத்தர் இருக்காங்க,நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிடலாம்ன்ற நம்பிக்கை கொடுக்கிறதுதான் தான் காதல்.அதனால எல்லாரும் காதலியுங்கள்,உங்கள் குடும்பத்தை,சுற்றத்தை,நட்பை,சக மனிதர்களை, கடவுள் நமக்கு வரமாக தந்த இயற்கையை.அன்பை கொடுத்து அன்பை பெரும் சுகம் சொல்லில் அடங்காது.அனுபவித்து பாருங்கள்!இந்த உலகத்தை, உங்கள் வாழ்க்கையை நேசியுங்கள்!


Thursday, February 18, 2010

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!


எல்லாருக்கும் வணக்கம்!நம்மோட மனச எப்படி எல்லாம் சந்தோஷமா வச்சிக்கலாம்னு சொல்ல போறேன். நம்மோட வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிடுச்சு அதனால நிறைய டென்ஷன், கோபம் எல்லாம் அதிகமாயிடுச்சு.நம்ம வீட்ல இருக்கறவங்ககூட பேசக்கூட டைம் இல்ல.இந்த சூழல்ல நாம நம்மள ரெப்ரெஷ் பண்ணிக்கிறது ரொம்ப அவசியம்.எப்படி?நிறைய வழிகள் இருக்கு.நமக்கு புடிச்ச சினிமாவுக்கு போகலாம்,கோவிலுக்கு,பார்க்,பீச் இப்படி நமக்கு பிடிச்ச வெளி இடங்களுக்கு அடிக்கடி போயிட்டு வரலாம்.வீட்ல இருக்குற நேரத்துலயும் டிவிலே மூழ்கிடாம குடும்பத்தினரோட சேர்ந்து பேசலாம்,கருத்துக்கள பறிமாறிகொள்ளலாம்.அப்பப்போ சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம்.யார் மேலயாவது கோபம் வந்தால் அவங்க செஞ்ச தப்ப நினைக்காம அவங்க நமக்கு முன்னாள் செஞ்ச நல்லதை எல்லாம் நினைச்சு பார்க்கணும்.இது பல பிரிவினைகள் அதனால வர்ற பிரச்சினை எல்லாம் தீர்க்கும்.ஏதோ சூழ்நிலை நமக்கு நெருக்கமானவங்களைகூட தப்பா நினைக்கவச்சிடும்.அதுக்கெல்லாம் நாம இடம் கொடுக்க கூடாது.சும்மா இருக்கற நேரத்தை உங்க மனசுக்கு பிடிச்ச விஷயங்கள செய்ய யூஸ் பண்ணலாம்.சிலருக்கு வரைய பிடிக்கும்,சிலர் சமையல் கலையில் ஆர்வமா இருப்பாங்க, இப்படி நம் மனச ரிலாக்ஸ் பண்ற எந்த விஷயத்தையும் தயங்காம அதுக்கும் டைம் ஒதுக்கி செய்யலாம். மனுஷங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க பழகிக்கணும்.அதுதான் உண்மையான சந்தோஷத்த கொடுக்கும்.பணம்,பதவி எல்லாம் பறந்து போய்டும்.பழகின மனுஷங்கதான் நம்மோட இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி கை கொடுப்பாங்க.அதனால, சந்தோஷமா நிம்மதியோட எல்லாரோடவும் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்வோம்!வாழ்க்கை வாழ்வதற்கே!எல்லோரையும் வாழ்த்தி நாமும் நலமுடன் வாழ்வோம்.


தமிழ் படம் விமர்சனம்!


எல்லாருக்கும் வணக்கம்!"தமிழ் படம்" நிறைய பேர் பார்த்திருப்பீங்க. ரொம்ப நாளைக்கப்புறம் நான் விழுந்து விழுந்து சிரிச்ச படம்.கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். திரும்ப சொல்லி போர் அடிக்க மாட்டேன்.அந்த பரதநாட்டிய சீன யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.மனுஷன் என்னமா ஆடியிருக்காரு?(பௌலிங் போட்டு இருக்காரு) .ஆஹா என்ன முகபாவனைகள்?கலக்கிட்டீங்க சிவா கிரேட்!டைரக்டர் க்கு பெரிய பாராட்டு பத்திரமே வாசிக்கலாம். ஒவ்வொரு சீனயுமே சொல்லணும், அத்தனை பேரோட குடும்ப பாட்டு இருக்குற CD ஆகட்டும்,பாடல்களுக்கு சிவா கொடுக்குற expressions ஆகட்டும் ,coffee வர்றதுக்குள்ள சிவா crorepati ஆகரதாகட்டும் ஐயோ சூப்பர் !எந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவுல இப்படியும் படம் பாத்தாதான் நம்மால் பிரெஷா இருக்க முடியும். Good Trial !Congrats to தமிழ் படம் team! இத எல்லாரும் நகைச்சுவை உணர்வோட மட்டும் பார்த்தால் நிச்சயம் enjoy பண்ணலாம்.புது முயற்சிய பாராட்டலாமே!


Wednesday, February 17, 2010

இன்பம் நம் மனதில்


நம் அனைவருக்கும் வாழ்வில் துன்பம் வருவது இயற்கை.சிலர் தமக்கு நேரும் துன்பம் போல் உலகில் வேறு எவருக்கும் வருவதில்லை என புலம்புவதை நாம் கேள்விபட்டிருபோம். உண்மையாகவே சிலருக்கு அடுக்கடுக்கான பிரச்சினைகள் வருவதுண்டு.இதை நாம் நம் மனதை பக்குவபடுத்தும் நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.துன்பம் இல்லை என்றால் இன்பத்தின் அருமையை நாம் எவ்வாறு அறியமுடியும்?கடவுள் நமக்கு துன்பங்கள் கொடுக்கிறார் என்றால் அவர் நமக்கு உதவி செய்ய தயாராக உள்ளார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்மால் மட்டுமே இத்தகைய துன்பங்களை எதிர் கொள்ள முடியுமென்று நம்புகிறார்.வாழ்க்கை நாம் நினைப்பது போல் போட்டி அல்ல வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும்; வாழ்க்கை ஒரு வரம் நாம் வாழ்ந்து பார்க்க,இயற்கையை ரசிக்க,வியக்க,....இன்பம் வரும்போது சந்தோஷமாக ஏற்றுகொள்ளும் நாம் துன்பத்தில் மட்டும் புலம்புவது எந்த விதத்திலும் சரி ஆகாது.இரண்டையுமே சமமாக பார்க்க பழகி கொள்ள வேண்டும்.இன்பமோ துன்பமோ இரண்டுமே நம் மனதில் மட்டுமே இருக்கிறது.சுற்றுசூழல் இன்பமாக இருந்தாலும் நம் மனதில் நிம்மதி இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்க இயலாது.நம்
மனதை பூவனம்போல் வைத்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதற்கான சில வழிமுறைகளை என் அடுத்த வலைப்பூவில் சொல்கிறேன்.

அதுவரை உங்கள் வாழ்வில் குளிர் தென்றல் வீசட்டும்...


Related Posts with Thumbnails