Wednesday, September 29, 2010

ஓ....மனமே!!!ஓ...மனமே!!!


ஒரு விஷயம் நம்ம ஆசைப்பட்டு கிடைக்கலன்னா அவ்ளோ வலிக்கும்.அது இயற்கை.நான் என்ன ஒரு optimistனு சொல்லிப்பேன்.எதுவந்தாலும் அதை சமாளிக்கனும்ன்னு சொல்வேன்.எனக்கு கொஞ்ச நாளா நெகடிவ் thoughts ஜாஸ்தியாயிடிச்சு.ஆனா அது என் சொந்த ஊருக்கு போறேன்னதும் பாஸிடிவ் எனெர்ஜியா மாறிடுச்சு.

இந்த சமயத்துல என் மனசுல தோணினதை எல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிவு. (யப்பா....இன்னும் முன்னுரையே முடியலையா????)

நாம கேட்காமையே நமக்கு ஒரு நல்ல அம்மா,அப்பா,குடும்பம்,நண்பர்கள்னு எல்லாரையும் பாத்து பாத்து நமக்கு கொடுத்த கடவுளுக்கு நமக்கு ஒரு அமைதியான வாழ்க்கைய அமைச்சுத்தர தெரியாதா என்ன?அதுக்கு நாம முழுசா நம்பனும்.நம் வாழ்கை நல்லா இருக்கும்னு.ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலைன்னா அது நமக்கு தகுதியானது இல்லை,அதனால நமக்கு நாம எதிர்பார்த்த சந்தோசம் கிடைக்காதுன்னும் எடுத்துக்கலாம் (சீ சீ இந்த பழம் புளிக்கும்....).அது எதாவது பொருளோ,பணமோ,மனிதர்களோ எதற்கும் பொருத்தி பாக்கலாம்.

ஒரு வேலை நமக்கு கிடைக்கலன்னா இதைவிட பெரிய வாய்ப்பு நமக்காக waitingல இருக்குன்னு அர்த்தம்.இதே தான் மத்த விசயங்களுக்கும்.அதனால மனசு துவள கூடாது.சிலபேர் பணம் இருந்தா வாழ்கை சந்தோஷமா இருக்கும்னு நினைக்கலாம்.ஆனா பணம் அவங்களுக்கு நிம்மதியை கொடுக்குதா??????நிச்சயம் கிடையாது.அப்படி கிடைச்சா அவங்க ஏன் நிம்மதிக்காக சாமியார்களை(உண்மையான) தேடி போகணும்?
அதனால மனுஷனோட நிம்மதி எதுலயும் இல்ல.அவனுக்குள்ளேதான் இருக்கு.ஒரு விஷயத்துக்கு வருத்தப்பட தேவையான எனெர்ஜிதான் சந்தோஷப்படவும் தேவைப்படுது.கவலைப்படரதால எதுவும் மாறாது.பின்னே ஏன் நம்ம நிம்மதியை நாமே குலைச்சுக்கணும்?இருக்கறவரைக்கும் மத்தவங்களையும் சந்தோஷபடுத்தி நாமும் சந்தோஷமா வாழ்வோம்:):):)
வாழ்க்கை வாழ்வதற்கே!!!Don't worry!!!!Be happy!!!!Enjoy every moment of life!!!

Monday, September 27, 2010

பதிவுலகத்திற்கு தற்காலிக டாட்டா

நான் என் சொந்த ஊருக்கு செல்வதால் (அட அதிசயமா அங்கேயே வேலை கிடைச்சுடுச்சுங்க....ஹி..ஹி) பதிவுலகத்திர்க்கு தற்காலிகமா என்னோட டாட்டா.எல்லாரும் சந்தோஷமா இருங்க.Bye bye!

Wednesday, September 22, 2010

இயற்கையை ரசிக்க கத்துகிட்டேன்....வாழ்வையும் சேர்த்து!


அப்போ நான் 10 ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.எங்களுக்கு பிரின்சிபால் அப்போல்லாம் இங்கிலீஷ் பாடம் சொல்லிகொடுக்க வாரம் ஒரு வகுப்பிற்கு(period) வருவார்கள்.இங்கிலிஷ்க்கு எங்களுக்கு வேற ஒரு ஆசிரியை இருந்தாங்க.இருந்தாலும் எங்க ப்ரின்சிபாலோட தனிப்பட்ட ஆர்வத்துல அவங்களே சில சமயம் பாடம் எடுப்பாங்க.பிரின்சிபால்ன்னு எந்த ஒரு கெடுபிடியோ,ஆர்ப்பாட்டமோ,ஆதிக்கமோ இல்லாத அற்புதமான மனுஷி.அவங்க கிளாஸ்க்கு வர்ற அந்த வகுப்புக்காவே காத்துகிட்டு இருப்போம். ஏன்னா பாடத்த பாடமா சொல்லாம கதை மாதிரி ரசிக்கும்படியா சொல்வாங்க.

அப்படி ஒரு நாள் அவங்க பாடம் நடத்தும்போது விடிகாலையைப்பத்தி பேச்சு வந்தது.அவங்க சொன்னாங்க (இங்கிலிஷ்லத்தான்) "நானும் பல வருஷமா விடியற்காலையிலே வானத்தை பாத்துகிட்டே இருக்கேன்.அது இருள்சூழ்ந்து இருக்கும்....ஆனா கண்ணிமைக்கிற நேரத்துல வெளுத்துபோயிடுது.அது எப்படின்னு யோசிப்பேன்.இன்னிக்குவரைக்கும் பதில் கிடைக்கல. இயற்கையோட அழகே அழகுதான்.இத இதுவரைக்கும் யாராவது கவனிச்சதுண்டா? "னு.அப்போதான் யோசிச்சேன்
பொழுது விடியர்துன்றது தினமும் நடக்குற ஒரு நிகழ்வு.ஆனா அதையும் ரசிச்சு கலைகண்ணோட பாக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அதுக்கப்புறம் ஒரு நாள் நிஜமாவே ஒரு காலை பொழுதில் உட்கார்ந்து பார்த்தேன்.ஆம் எல்லாமே ஒரு நொடியில் மாறுது.இருள் சூழ்ந்து இருக்கும் வானம் ஒளி படர்ந்து காட்சி கொடுக்குது.இதே போலத்தான் நம்ம வாழ்க்கைல வர்ற கஷ்டங்களும் அந்த இருளைப்போல இருந்த தடம் தெரியாம மறைஞ்சுடும்னு நம்ப ஆரம்பிச்சேன்.

இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்கனு தெரியாது.ஆனா எனக்கு வாழ்க்கைய ரசிக்க கத்துகொடுத்தவங்கள்ள அவங்களும் முக்கியமான ஒருத்தர்.

Tuesday, September 21, 2010

கவிதைகள்-II

போதை!

அன்பும்,
பாசமும்
ஒருவிதத்தில்
போதைதான்
அதை
இழக்கமுடியாமல்
மனம்
தள்ளாடுகிறதே!

பற்று!

பற்றற்று வாழ்
மரணத்திற்கு
பின் சொர்க்கம் செல்வாய்
என்கிறது
சாஸ்திரம்;
சொர்கலோக
வாழ்வை
நாடுவதே
ஒரு
பற்றல்லவா???!!!!

Friday, September 17, 2010

நான் ரசித்த பாடல் வரிகள்!!!

நான் ஒரு பாட்ட கேட்கறதுக்கு மியூசிக்,பிடிச்ச ஹீரோ நடிச்ச பாடல் இப்படி பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் அந்த பாடலோட வரிகள்.
அப்படி நான் ரசிச்ச சில பாடல் வரிகள்தான் இங்கே கொடுத்திருக்கேன்.

அட்டகாசம் படத்துல "தீபாவளி"ங்குற பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்துவந்தா ஒரே தோளில் ஏற்றி வைக்கும்"
எப்போவும் தன்னம்பிக்கையும்,சாதிக்கணும்கிற எண்ணத்தையும் விதைக்கிற வரிகள்.

ரெட் படத்துல "கண்ணை கசக்கும்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே;உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே".இந்த உலகம் இப்போ இருக்குற நிலைமைல நம்மள விழிப்பா இருக்கணும்னு சொல்ற வரிகள்.

காதல் வைரஸ் படத்துல "எந்தன் வாழ்வின்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"
காதல் ஒன்றும் காயமல்ல காலபோக்கில் ஆறிபோக","என்னைவிட்டு போனது அமைதியன்றோ;நீயுமில்லா நானுமோர் அகதியன்றோ".ஆஹா காதலோட வழிய சொல்ற அருமையான வரிகள்.

சிகரம் படத்துல "அகரம் இப்ப" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்கை உள்ளது".இந்த பாடல் முழுக்க தன்னம்பிக்கை சிந்தனைகள் இருந்தாலும் இந்த ரெண்டு வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.Thursday, September 16, 2010

விளம்பரமா காமெடியா?


இப்போ நான் சொல்லபோறது sharon plywoods விளம்பரத்தபத்திதான்.
ஒருத்தர் யானை தும்பிக்கையை தூக்கிப்பார்த்து அங்கிருந்து சில இடங்கள் எவ்ளோ தூரத்துல இருக்குனு துல்லியமா சொல்றாரு.அதுக்கு அவரிடம் வழிகேட்ட ரமேஷ் கண்ணாவும் எப்படியா யானையின் தும்பிக்கையை பார்த்து கரெக்டா சொல்றேன்னு கேட்டா தும்பிக்கையை தூக்கி அங்கே NH distance காட்ற போர்ட காட்றாரு."சின்ன விஷயத்துக்கு பெரிசா யோசிக்காதிங்க"ன்னு வாசகம்.நல்லா இருந்துச்சு.

இது கொஞ்ச நாள் முன்னாடி எதோ ஒரு படத்துல காமெடில வந்தாப்ல இருக்கு.
ஒரு கழுதை வாலை தூக்கி மணி கரெக்டா சொல்வாரு ஒருத்தர்(யார்னு ஞாபகம் இல்ல).அவரை பெரிய புத்திசாலியா நினைச்சு பாராட்டிற்றுக்கும்போது அந்த வாலை தூக்கி அங்கிருக்கும் மணிக்கூண்டை காட்டுவார்.அந்த காமெடிதான் இப்போ இந்த விளம்பரம் பாத்தா நினைவுக்கு வருது.

கவிதைகள்!

அன்னை!

உருவற்று கிடந்த எனக்கு
உடல் கொடுத்தவள்,
உணவற்று தவித்த எனக்கு
தன் உதிரத்தையே பாலாக்கியவள்,
கல்வியறிவற்று திரிந்த எனக்கு
பள்ளியனுப்பி பாடம் புகட்டியவள்,
என் வளமான வாழ்வுக்கு
அடித்தளம் அமைத்தவள்
இன்று அவள்மட்டும்
தனிமரமாய்
எங்கள் சொந்த கிராமத்தில்,
நானோ நாகரிகம்
தந்த சுகவாழ்வுடன்
அயல்நாட்டில்!!!!

மனம்!

மனித மனம்
ஒரு
குரங்காம்,
யார் கூறியது?
இதோ
என் மனம்
வேறு யாரிடமும்
தாவாமல்
அவளை மட்டுமே
வட்டமிடுகிறதே!

சிறைப்பறவை!

சுதந்திர வானில்
சுற்றிதிரியும்போது
என்றேனும் ஒரு நாள்
வேடனிடம்
அடிபட்டு இறப்பதைவிட
என் ஆயுட்காலம் முழுவதும்
உன் நெஞ்சக்கூட்டில்
சிறைப்பறவையாய்
வாழ்வதே மேல் அல்லவா???!!!

கவிஞன்!

அவன்
ஒரு
சிறந்த கவிஞனாம்
நான் அதை ஏற்கமாட்டேன்
அவன் இதுவரை
உன் விழிகளை
வர்ணித்ததே இல்லையே???!!!

Wednesday, September 15, 2010

என்னமா யோசிக்கிறாங்க....!!

இது சமீபத்துல பார்த்து ரசிச்ச 2 விளம்பரங்கள பத்தின பதிவு.
1.Idea மொபைல்:நான் சொல்ற விளம்பரம் லேட்டஸ்ட்டா அவங்க கொண்டு வந்தது."அபிஷேக் பச்சன் வாய் பேச முடியாதவர்.ஒரு டீ கடையிலே பல பேர் வேலை விஷயமா மொழிதெரியாத இடத்துக்கு போறதா காட்டிட்டு அவங்க மொழிப்பிரச்சினைக்கு அபிஷேக் தீர்வு சொல்றா மாதிரி இருக்கு.அவர் போன்லயே எல்லாரோட மொழிப்பிரச்சனையும் தீர்த்து "Idea"விலே குறைந்த ரேட்ன்னு சொல்லாம சொல்றார்".சாலமன் பாப்பையா ஸ்டைல்லே சொன்னா அருமைய்யா.எனக்கு அந்த விளம்பரத்தோட புகைப்படம் கிடைக்காததால எதோ எனக்கு தெரிஞ்ச அளவு explain பண்ணி இருக்கேன்.
2.டைரி மில்க்:


ஒரு நடுத்தர வயது வாலிபன் அவர் மனைவிக்கு ஜீன்ஸ் போட்டு அழகு பார்க்க நினைக்குறாரு.ஆனா அந்தம்மா கூச்சம் காரணமா வெளிய வரமாட்டேன்குறாங்க.டைரி மில்க் சாப்பிட்டதும் ஒரு இனிய ஆரம்பமா அவங்க தயக்கத்தைவிட்டு தன கணவனின் ஆசைக்காக வெளியே வராங்க.அவங்களை வெளியிலே சந்தோஷமா ஒரு வாலிபன் வரவேற்கும்படி நன்றாக உள்ளது.

கவிதை!

காதலித்தால் கவிஞனாகிவிடலாமாம்
யாரோ சொன்னார்கள்;
ஏன் நட்பின் பிரிவிலும்
கவிதை எழுதலாம்;
நம்பவில்லையா?
இதோ நாள்தோறும்
என் டைரியில்
உன் பெயரை மட்டுமே
கிறுக்கி தள்ளுகிரேனே!!!

என்னவளே!

என் புன்னகைதான்
என்னிடத்தில்
உனக்கு பிடிக்கும்
என நன்றாக தெரியும்
எனக்கு;
அதனால்தானே
அதைமட்டும்
என்னிடமிருந்து
கவர்ந்து சென்றாய்???!!!!

Monday, September 13, 2010

ஸ்வர்ணலதாவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!


"எவனோ ஒருவன்" பாடலில் என் உள்ளம் கரைத்த குரலழகி ஸ்வர்ணலதா இன்று நம்முடன் இல்லை.இளைய வயது பிரமுகர்களெல்லாம் இறைவனடி சேறும் காலம் போலும்.முதலில் நடிகர் முரளி(46),இப்போது இவர்(37).இவர் 1989ம் ஆண்டு திரையுலகத்திர்க்கு வந்தார்.திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்த இவருக்கு 37 வயது.நுரையீரல் பாதிப்பால் நேற்று காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார்.

இந்த தலைசிறந்த பாடகி தன் மந்திர குரலால் பலரை கட்டி போட்டுள்ளார் என்பது உண்மை.எத்தனை பாடல்கள்."குயில் பாடு","போறாளே பொன்னுதாய்","பூங்காற்றிலே",...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தேசிய விருது வாங்கியவர்.

இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என் மனமார்ந்த அஞ்சலிகள்!!!

Wednesday, September 8, 2010

நன்றி!!!

இது என் 25வது பதிவு.(அவனவன் சத்தமே இல்லாம 100 200 னு போய்கிட்ருக்கான் 25கே இப்படியா?)ஹி ஹி:):)

இதுவரை எனக்கு பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!என் முதல் Follower ஆன "அப்பாவி தங்கமணி" அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.ஏனெனில் இனி பின்னூட்டமும் பின்தொடர்பவர்களும் இல்லையெனில் நான் எழுதுவதை(ப்ளாக்) நிறுத்திவிடலாம் என்றிருந்தேன்.(நீங்கல்லாம் தப்பிச்சிருப்பீங்க...ஹ்ம்ம் என்ன பண்றது?)எனக்கும் (என் எழுத்துக்கு) மதிப்பு கொடுத்து என்னையும் follow பண்ணும் 5 நல்ல உள்ளங்களுக்கும்(அப்பாவி தங்கமணி,L.K, S.K,வித்யா,மின்மினி.காம்), தமிளிஷ்(இன்ட்லி)-இல் follow பண்ணும் இருவருக்கும்(RDX,YUvaetff) நன்றி ஹை!என் ப்ளாகை படித்து பின்னூடமிடாதவர்களுக்கும் நன்றி(இனிமேலாவது ஏதாவது பின்னூட்டம் போடுங்கப்பா,இல்லன்ன தமிழ்மணம்,இன்ட்லி இப்படி எதிலயாவது வோட்ட குத்துங்க).

நடிகர் முரளிக்கு அஞ்சலி!!!:(:(


முரளி....பூவிலங்கு திரைப்படம் மூலம் திரைஉலகிர்க்கு வந்து வெற்றி நாயகனாய் வலம் வந்தவர்.46 வயதாகும் இவர் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இவர் வெற்றிக்கொடிகட்டு,இதயம்,பகல் நிலவு போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் சிவாஜி,பிரபு,பார்த்திபன்,சூர்யா,சரத்குமார்,மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவரது மகன் அதர்வா நடித்த முதல் படமான "பானா காத்தாடி" இவருக்கு கடைசி படமாக அமைந்தது வருத்ததிற்குரியது.இவர் தந்தை கன்னடர்,தாய் தமிழ்.இவர் திருமணம் காதல் திருமணம்.இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
சமீபத்தில் மகன் அதர்வாவுடன் "காபி வித் அனு" நிகழ்ச்சியில் பங்கேற்று மிக சிறப்பாக உரையாடியது இன்னும் கண்களில் உள்ளது.இந்த நிகழ்ச்சிக்குப்பின் என்னை வெகுவாக கவர்ந்தார்.


இந்த மிகசிறந்த நடிகருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!:(:(:(

Wednesday, September 1, 2010

ஸ்ரீ பாதம்!!!


கிருஷ்ண ஜெயந்தின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு வர்றது பூஜை செய்றது,பட்சணம் பண்ணறது,முக்கியமா பாதம் போடுறதுதான்.இந்த பாதம் பிறந்த குட்டி கிருஷ்ணர்துன்னு பலர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.(ஏன் முதல்ல நானும் அப்படிதான் நினைச்சேன்). சிலர் தங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளோட பாதங்கள மாவுல நனைச்சு பாதம் போடுறதை பாத்திருக்கேன்.ஆனால் அது அப்படி இல்லை.

திருமால் இருக்கும் எல்லா இடத்திலையும் மகாலட்சுமியும் குடிஇருப்பா.அந்த பாதமும் கிருஷ்ணரோட பாதம் இல்ல, அதற்கு பேர் "ஸ்ரீ பாதம்".மகாலக்ஷ்மியோட கால் தடம்.ஐஸ்வர்யத்தோட முகவரி.
இந்த தகவலோட இந்த வருஷ "கிருஷ்ண ஜெயந்திய" கொண்டாடுங்க.

டிஸ்கி:இந்த தகவல் "ரேவதி சங்கரன்" அவர்கள் "சூப்பர் மாம்" நிகழ்ச்சிக்காக விஜய் டிவில சொன்னது இது.தெரியாதவங்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னுதான் இந்த பதிவு.

Related Posts with Thumbnails