Thursday, July 22, 2010

என்னவள்....அவளா???!!!

ஒரு நாள் காலை வேளையில் அலுவலகம் செல்ல பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.தூரத்தில் அவள் வருவது கண்டேன்.'அவளா?அவள்தான?எனக்குள் ஏகப்பட்ட சந்தேகம்.அருகில் வரட்டும் பார்க்கலாம்'.அவள்...என் மனதில் தென்றலென வந்து புயலென மாறி என் வாழ்வையே புரட்டிபோட்டவள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவளும் ஒரே கல்லூரியில்தான் பயின்றோம்.எங்களுக்குள் முதலில் மோதல் பிறகு அனைத்து தமிழ் சினிமாவிலும் வருவது போல் அப்படி ஒரு தெய்வீக(?) காதல்.அவளை நான்
என் உயிரின் வடிவமாகப்பார்த்தேன்.என் உலகம் எப்போதுமே அழகுதான்... அது இன்னும் பேரழகானது அவளால்தான் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு?

நான் இன்றே புதியதாய் பிறந்தவனை உணர்ந்தேன்...காற்றிலே சிறகுகளின்றி மிதந்தேன்.என் நாட்கள் நொடிகளென கரைந்தது.இதுவரை நான் பார்த்த பல இடங்கள் எனக்கு மெருகூட்டப்பட்ட அழகுடன் காட்ச்சியாளித்தன...என்னவளின் அருகாமையால்.என் வாழ்வின் அர்த்தமே என் கண்முன்னே அவள் உருவம் கொண்டு வருவதாய் கற்பனை செய்தேன்.

இவையெல்லாம் எங்களது கல்வியை disturb செய்ய நாங்கள் அனுமதிக்காததின் பலன் எங்கள் இறுதியாண்டு campus தேர்வில் இருவரும் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்ததில் தெரிந்தது.அதன்பிறகு வாரம் இருமுறை பீச்களிலும்,பார்க்களிலும்,சினிமா தியேட்டேர்களிலும்,இன்னபிற இடங்களிலும் தொடர்ந்தன எங்கள் காதல்.

நாட்கள் கடந்தன.எங்கள் காதலை எங்கள் வீடுகளில் சொல்லும் நேரமும் வந்தது.
நான் என் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டேன்...எனக்கு அது பெரிய வேலையாக இருக்காது என்பது முன்னமே தெரிந்த விஷயம்தான்.என் வீட்டில் சிறுவயதுமுதல் என் விருப்பத்திர்க்கே முன்னுரிமை.அவள் வீட்டில் எங்கள் ஜாதி வேற்றுமை பெரிதாய் தோன்றவே எங்கள் ஆத்மார்த்தமான காதலை நிராகரிக்க துணிந்தனர்.நாங்கள் எவ்வளவோ மன்றாடியும் நாங்கள் விரும்பிய வாழ்வமைத்துக்கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை.

நாங்களும் எங்கள் முடிவில் உறுதியாய் இருந்தோம்.அனால் விதி அவள் அன்னையின் மூலம் சதி செய்தது.அவள் அன்னையின் தற்கொலை முயற்சி அவள் உறுதியை குலைத்தது.ஆம் அவர்கள் பார்த்து முடிவு செய்திருந்த அவர்கள் ஜாதி பையனுக்கே அவளை மனம்முடித்துவிட்டார்கள்.திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு என்னிடம் அவள் வந்து 'என்னை மன்னித்துவிடு!நம் காதல் எனக்கு பெரிதுதான் ஆனால் அதைவிட என் அம்மா எனக்கு முக்கியம்.நீயும் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று கூறிவிட்டு சென்றாள்.என் நெஞ்சில் இடியை இறக்கியதுபோன்ற ஒரு உணர்வு.நீ இல்லாது ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்க இயலுமா என்னால்?உன்னை என் உயிர் என்றல்லவா கருதி இருந்தேன் இன்று என்னை மறந்து விடு என்கிறாய்.எப்படி மறப்பேன்?என் இதயம் துடிப்பதை நிறுத்தினாலும் உன்னை நினைப்பதை நிறுத்தாதே?என் வாழ்வு இனி உன்னோடு அல்ல என்பதை நீ கூறிவிட்டாய்...சரி உன் நினைவுகளோடுதான் நான் முடிவுசெய்துவிட்டேன்.

காலங்கள் உருண்டோடிவிட்டன.அதோ தூரத்தில் அவள் எதிரில் அவளேதான்.அவளை பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை.பார்த்தால் என் மனம் என்னவளை கண்டதுபோல் துள்ளிக்குதிக்கும்...வேண்டாம் நான் அவளை காணப்போவதில்லை.இன்று அவள் இன்னொருவனின் மனைவி.நான் எப்படியேனும் இந்த இடத்தைவிட்டு அகன்றாகவேண்டும்.அவள் வருவதர்க்குள்.அவள் இந்த பேருந்து நிலையத்துக்குத்தான் வருகிறாள்...அருகில் வந்துவிட்டாள்.அப்பாட!நான் போகவேண்டிய பேருந்து வந்தாயிற்று.நான் அந்த பேருந்தில் ஏறினேன்.என் மனம் மட்டும் அந்த பேருந்து நிலையத்திலேயே!!!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails