Friday, June 25, 2010

நட்பே நட்பே...!

பெண்களின் நட்பு....எவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தாலும், ஆழமாக பழகினாலும் ஒரு நிலைக்கு மேல் தொடர இயலாமல் போவது பெரும் சோகம்.
ஆம்.. திருமணங்களின் மூலம் கருகி போகும் அவர்களின் நட்பை பற்றி இங்கே கூற வேண்டும் என தோன்றியது.

எனக்கு தெரிந்த இரு தோழிகளை பற்றி கூறுகிறேன்.
பிரியா ,ஜான்ஸி என இரு தோழிகள்.ஒரு ஆழமான நட்பு அவர்களுக்குள் துளிர்விட்டது.அவர்களது நட்பின் ஆழம் மிகப்பெரியது. தினமும் போனில் அரட்டை, தான் உண்ட உணவிலிருந்து கண்ட கனவு வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டனர்.சினிமா,ஷாப்பிங் இப்படி எங்கு செல்வதாயினும் இருவரும் ஒன்றாகவே செல்வர் .அப்படி இருந்த நட்பிற்கு ஒரு நாள் வந்தது சோதனை.
ஜான்சியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்,திருமணமும் நிச்சயித்தாகிவட்டது.மாப்பிள்ளை நல்ல வேளையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்,அதுவும் ஜான்சியின் கனவு நிறுவனத்தில்.ஜான்சியின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.அவள் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்போது ப்ரியாவிற்கு புரிந்து விட்டது நாம் பிரிய போகிறோம் என்று.இருப்பினும் தன் தோழி மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மனதை தேற்றி கொண்டாள்.ஜான்சியும் நாம் எப்போதும் போல் பேசுவோம், சந்திப்போம் என கூறியதை எல்லாம் நம்பாமல் நம்பினாள். திருமணமும் நன்றாக நிகழ்ந்தது. பிரியா திருமணத்தின் முதல் நாளே வந்து இறுதி வரை இருந்து தோழியை புகுந்த வீட்டிற்க்கு வழி அனுப்பிவிட்டுதான் சென்றாள்.திருமணம் ஆன புதிதில் வாரம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தவர்கள் இருவரும் நாள் கணக்கில் பேசாமல் இருந்தனர்.சூழ்நிலைதான் காரணம்.ஆயினும் இருவருக்குள் இருந்த பாசப்பிணைப்பு அறுபடதொடங்கியது.இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் காணாமல் போனது.நாட்கள் மாதங்களானது,மாதங்கள் வருடங்களானது.இருவரும் பிறந்த நாள்,திருமண நாள் வாழ்த்து கூறுவதோடு சரி.அதுவும் வெறும் இரண்டு மூன்று வருடங்களுக்குத்தான்.பின் அதுவும் இல்லாமல் போனது.

இப்படி தான் பல பெண்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு உடைபட்டு போகிறது.
என்னதான் ஆழமாக பழகி இருந்தாலும் தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு புதிய சூழல்,பொறுப்புகள் வரும்போது எல்லாம் காற்றிலே கலைந்து போகும் மேகமென மாறிப்போவது இயற்கை.

பெண்களே!உங்கள் பொறுப்புகளையும் நிறைவேற்றி உங்கள் நட்பையும் தொடரலாமே.எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதிக்கிறார்கள்.பெண்களுக்குத்தான் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் உள்ளதாம்.உங்கள் துன்பத்தில் உடன் இருந்து கை கொடுத்து ஆறுதல் சொல்லி,உங்கள் இன்பத்தை இரட்டிப்பாக்கிய நட்பை என்றும் மறக்காதீர்கள்.
ஆண்களே!உங்கள் மனைவியும் உங்களை போல ஒரு மனித பிறவி.பிறரோடு நட்பு கொள்ளாமல் யாராலும் வாழ இயலாது.ஆகையால் அவர்களின் நட்பு தொடர நீங்களும் உங்களால் இயன்ற உதவிகளை செய்யலாமே.
சிந்தியுங்கள்....!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails